



செ.வே.முத்தமிழ்மன்னன்
பெட்டாலிங் ஜெயா, ஆக 26-
நாட்டில் புகழ்பெற்ற மை எஃப் சி கால்பந்து கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வைஷ்ணவி கிளப் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்றது.
மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 24 குழுக்கள் கலந்து கொண்டன.
மை எஃப் சி கிளப் தலைவர் மணியரசு தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் வைஷ்ணவி கிளப் அனைத்து ஆட்டங்களில் வெற்றி பெற்று டத்தோஸ்ரீ சாரா கிண்ணத்தையும் 5,000 வெள்ளி ரொக்கத்தையும் தட்டிச் சென்றது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த பேராக் மை டிரிம்ஸ் கிளப்புக்கு பரிசுகளும் 3,500 வெள்ளி ரொக்கமும் வழங்கப்பட்டது.
காப்பார் அவனா கிளப் மற்றும் கெடா கே 7 கிளப் 3,4 ஆவது இடத்தை பிடித்தன
இந்த குழுக்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு வருகை புரிந்த டத்தோஸ்ரீ சாரா, சிலாங்கூர் மாநில போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி இராஜன், புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி ஹரிகிருஷணன், தொழில் முனைவர் தீனா, சபாஹாட், நடா, ரவி ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி வெற்றி பெறுவதற்கு முழு ஆதரவு வழங்கிய டத்தோஸ்ரீ சாரா உட்பட அனைவருக்கும் கிளப் தலைவர் மணியரசு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மை எஃப் சி கால்பந்து கிளப்பை சேர்ந்த சத்தியா, முரளி, குமார், பயிற்றுநர் சுப்பராவ் ஆகியோரும் போட்டி வெற்றி பெற முழு ஆதரவு வழங்கினர்.

