
சென்னை: மே 5-
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனாலும் தனி மெஜாரிட்டிக்கு 10 இடங்கள் கிடைக்காததால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய உள்ளது.
திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை தற்போது தவெகவுக்கு உருவாகியுள்ளது
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை திமுக 59, காங்கிரஸ் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, தேமுதிக 1, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களும் பெற்றன.
அதிமுக கூட்டணியில் அதிமுக 47, பாஜக 1, பாமக 4, அமமுக 1 ஆகிய இடங்களை பெற்றனர்.
இந்த அடிப்படையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து 3ஆவது இடத்தை பிடித்தது.
இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழக அரசியலில் எப்போதும் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று பலமான எதிர்க்கட்சியாகவும் இருந்து வந்துள்ளன.
ஆனால், இன்று இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் தவெக வந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

