நெகிரியில் எதிர்க் கட்சியாக இருக்க அம்னோ விரும்பவில்லை!

கோலாலம்பூர், மே 5-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்க அம்னோ ஒருபோதும் முடிவு செய்யவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

மாறாக ஒற்றுமை அரசாங்கத்திலேயே தொடர்ந்து நீடிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கத் தயாராக இருப்பதாக முன்பு தெரிவித்திருந்த பல அம்னோ மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் வெறும் ஒரு கூற்றாகவே கருதப்பட்டன.

எதிர்க்கட்சியாக இருக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அது வெறும் ஒரு கூற்று மட்டுமே.

ஆனால், நெகிரி செம்பிலானில் உள்ள மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே நீடிப்பார்கள் என்று மத்திய அளவில் அம்னோ முடிவு செய்துள்ளது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles