

மா பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 26-
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட புதிய நிலத்தில் இன்று ஆகம முறைப்படி பூமிபூசை நடத்தப்பட்டது.
கோவில் செயலாளர் ஹரிஹரன் தலைமையில் இன்று காலையில் பூமி பூசையை இரண்டு குருக்கள் ஆகம முறைப்படி நடத்தி வைத்தனர்.
பல போராட்டங்களுக்கு மத்தியில் செந்தூல் நாகம்மாள் கோவிலுக்கு செந்தூல் சிவன் கோயில் வரிசையில் நிலம் கிடைத்தது
கோவில் நிர்வாகம் புதிய இடத்திற்கு மாறி செல்வதற்கு முன் மேம்பாட்டு நிறுவனம் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் கோவிலை கட்டியது.
இதற்கு கோவில் நிர்வாகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததை தொடர்ந்து கோவில் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆகம முறைப்படி பூமிபூசை சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் ஆலோசகர் மற்றும் ம இகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் டத்தின் தனலெட்சுமி தம்பதியர், பெரியவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

