
கோலாலம்பூர், ஆக. 25- ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மண் அமிழ்வில் சிக்கி காணாமல் போன இந்திய மாது ஒருவரை தேடி மீட்கும் பணி தொடரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதியளித்துள்ளார்.
விஜயலட்சுமி (வயது 48) என்ற அந்த மாதுவுக்கு ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பில் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்ட அவர்,பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்திக்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை தாம் பணித்துள்ளதாக க் கூறினார்.
இச்சம்பவத்திற்காக அனுதாபம் தெரிவிக்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்திக்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை நான் பணித்துள்ளேன்.
அதே சமயம் தேடி மீட்கும் பணிகளைத் தொடரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன் என்று அவர் சொன்னார்.
Bernama

