விஜயலட்சுமியின் வாரிசுகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்! டத்தோ பண்டார் அறிவிப்பு

கோலாலம்பூர்: ஆக 25-
அடைமழையால் நடைபாதை சரிந்து விழுந்ததில் புதையுண்ட விஜயலட்சுமியின் வாரிசுகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்.

அவர்களின் விசா காலக்கெடுவும் நீட்டிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் (டத்தோ பண்டார்) டத்தோஶ்ரீ டாக்டர் மைமுனா முஹமட் ஷெரிப் இன்று தெரிவித்தார்..

புதையுண்ட விஜயலட்சுமியை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுற்றியுள்ள 6 முதன்மை சாக்கடை குழாய்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.

அதில் எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பிளஸ் செய்யும் வழிமுறைகள் கையாளப்பட்டு வருகிறது.

இதற்கான நடவடிக்கைகளை மீட்புக் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் விஜயலட்சுமியை தேடும் பணிகள் தொடரும் என்று அவர் கூறினார்.

இச் சம்பவத்தால் மக்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்து வருகிறது.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளன.

இதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles