

புந்தோங், ஆக 25-
நாட்டின் . தேசிய தினத்தை முன்னிட்டு ஈப்போ புந்தோங்கில் சைக்கிள்கள் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வல நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.
ஈப்போவில் , கம்போங் பாரு புந்தோங் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் 21 ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்வில் 50 மாணவர்கள் பங்கேற்றனர்
புந்தோங்கில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி சைக்கிள்களில் மாணவர்கள் புந்தோங்கை வலம் வந்தனர்
இந்த எதிர்பாரத்ததை் விட அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு
பந்தோங்கில் உள்ள குரு கல்கிடார் ஆரம்ப பள்ளியில் தொடங்கியது.
மாணவர்கள் மத்தியில் தேச பற்றை விதைக்க இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்படுவதாக அதன் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். செல்வநாதன் கூறினார்.
இங்கு இந்த நிகழ்வு நடைபெற அரசாங்கத்தின் ஆதரவும் மக்கள் பிரநிநிதிகள் , கம்போங் பாரு ருக்குன் தெத்தாங்கா நிர்வாகம் மற்றும் மக்களின்ஆதரவு சிறப்பாக இருந்தது என்றார்.
இதில் கிந்தா மாவட்ட ஒற்றுமை துறை இலாகா அதிகாரி புவான் ஹாஜார் அமாட் கலந்துக்கொண்டு ஆற்றிய்உரையில் பல இனம் வாழும் இந்த நாட்டில் .சமுஐ ஒற்றுமை வலுபெற இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் இந்த ஊர் வலத்தில் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட சைக்கிகளுடன் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.

