

ஈப்போ, ஆக.26: தமிழ்நாடு அரசு ஏற்பாட்டில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை
கவிவீரராகவன் என்னும் இயற்பெயரையுடைய கச்சியப்பர் கோயில் அர்ச்சகரும் ஒரு புகழ் பெற்ற கவிஞரும் வேதாந்தவாதியும் ஆவார்.
கந்தபுராணம் என்னும் நூலை இயற்றிய புலவர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்.
“
திகட சக்கர செம்முகம் ஐந்துளான்” என்று முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுக்க முருகன் வரலாற்றைக் கந்தபுராணமாகப்
பாடினார். மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படும் இது, வட மொழி ஸ்கந்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். ஆறு காண்டங்களையும்
13,305 பாடல்களையும் உள்ளடக்கி அதே பாணியில் ஆக்கப்பட்டுள்ளது.
கச்சியப்பரின் கணக்கின் படி ஒவ்வொரு நாளும் அவர் முருகன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய பாடல்களை எழுதி, மாலையில்
குமார கோட்டத்தில் உள்ள சுப்பிரமணியன் கருவறையில் வைப்பார். ஒவ்வொரு இரவும், அதிசயமாகக் கச்சியப்பரின் கையெழுத்துப்
பிரதியை இறைவன் தனது சொந்தத் திருத்தங்களுடன் மாற்றியமைப்பார். எனவே கந்தபுராணம் என்பது முருகப் பெருமானின் திருவருளை
முழுமையாகப் பெற்ற நூல் எனக் கருதப்படுகிறது.
ஈப்போவின் மண்ணின் மைந்தனான இவர்தம் கந்தபுராணத்தைக் கருத்தூன்றிக்கற்று, சொற்பொழிவாற்றுவதுடன் கந்தப்பெருமானின் பெரும் புகழை மலேசிய நாட்டின்
எட்டுத் தலைநகரங்களில் ஆண்டுதோறும் 7 நாட்கள் விழா நடத்தியும் பரப்பி வருபவர் மருத்துவர். வ.ஜெயபாலன்.
இவர்தம் ஏற்பாட்டில் மலேசிய நாட்டில் பல அருணகிரிநாதர் மன்றங்கள் தொடங்கப்பட்டு அங்கும் விழாக்களும், வளரும் குழந்தைகளுக்கு
வழிகாட்டும் நோக்கில் முருக இலக்கியங்கள் குறித்த வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கந்தப்பெருமான் புகழைக் கடல் கடந்து, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின்
வாயிலாகவும் பரப்பிவரும் மருத்துவர்.வ.ஜெயபாலன் செந்தமிழ்ச் சேவையை வாழ்த்தி அனைத்துலக முத்தமிழ்
முருகன் மாநாட்டில் “ கந்தபுராணம் கச்சியப்பர் விருதும்”பதக்கமும் வழங்கிப் பாராட்டப்பட்டார்.

