
சுபாங் தோட்டத்தில் வாழ்ந்து வந்த தோட்டப்பாட்டாளிகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பதாக கூறிய மேம்பாட்டு நிறுவனத்தின் வாக்குறுதி காற்றில் என்று சுபாங் தோட்டப் பாட்டாளிகள் குடியிருப்பு சங்கத்தின் தலைவர் கணேசன் மற்றும் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்.
நாங்கள் குடியிருக்கும் இடத்தில் 40 பாட்டாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதாக மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி அளித்து நாங்கள் தற்காலிகமாக குடியிருக்க நீண்ட வீடுகளை கட்டிக் கொடுத்தது.
நாங்கள் இந வீட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கிறோம்.
ஆனால் மேம்பாட்டு நிறுவனம் எங்களுக்கு இதுநாள் வரை வீடுகளை கட்டிக் கொடுக்க வில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

