பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் ஜாலோர் கெமிலாங் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் ஆக 26-
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் நேற்று ஜாலோர் கெமிலாங் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவரும் நாடறிந்த சமூக சேவையாளருமான ஸ்டார் மணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரூக்குன் தெத்தாங்கா உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு தேசிய கொடிகளும் இலவசமாக வழங்கப்பட்டது என்று ஸ்டார் மணியம் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தினத்தை முன்னிட்டு ஜாலோர் கெமிலாங் கொடியை பறக்க விடும் நிகழ்வை பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா சிறப்பாக செய்து வருகிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles