
ஈப்போ, ஆக 27 சுதந்திர மாதத்தின் அடிப்படையில் சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அன்னையர் தந்தையரை சிறப்பிக்கும் பொருட்டு கலைநிகழ்ச்சியுடன் விருந்தோம்பலை வழங்கிய பேராக் மாநில ஐ பி எப் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவிற்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார் தேசிய. ஐ பி எப் கட்சியின் துணைப் பொருளாளரும், பினாங்கு மாநில தலைவருமாகிய டாக்டர் எஸ்.குமரேசன்.
இந்நாட்டில் ஒரு சமயத்தில் வசதியானவர்கள் மட்டுமே அரசியல் துறையில் ஈடுபட வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அவ்வேளையில் ஏழைஎளியோருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போயிற்று. அந்த நிலைப்பாட்டை துடைத்தொழித்தவர் ஐ பி எப் கட்சியின் நிறுவனர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் என்றால் மிகையாகாது. அன்னவரின் வாயிலாக இன்று இந்நாட்டு இந்தியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு கிடைக்கப்பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்நாட்டில் ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் பட்டதாரிகள் உருவாக வேண்டும் என்று முழக்கமிட்டவர் டான்ஸ்ரீ எம.ஜி. பண்டிதன்.
அதன் அடிப்படையில் இன்று பல ஏழை குடும்பத்திலிருந்து பட்டதாரிகள் உருவாகி வருவது மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கட்சி் பாச உணர்வுகளுடன் இணைந்து வளர்க்கப்பட்ட கட்சியாகும்.
அதனால்தான் இக்கட்சியில் அனைவரையும் உறவுமுறைகளுடன் அழைப்பார்கள். இந்த உறவு என்றென்றும் தொடர வேண்டும்.
அதனால்தான்” இப்படை தோற்கின் எப்படி வெல்லும்” என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
இந்நிகழ்வில் நிறைவுவிழாவில் அன்னையர்கள் அனிசல் வெட்டி மகிழ்விக்கப்பட்டனர். பின் மூத்தகுடிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
பேராக் மாநில ஐ பி எப் தலைவர் மாணிக்கம் மற்றும் தொகுதி தலைவர்கள் சிறப்பு பிரமுகரை மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பித்தனர்.
இளைஞர் பகுதி தலைவர் சர்வின் காளியப்பன் மற்றும் பேராக் மகளிர் பிரேமா மேரி மாணிக்கம் ஆகியோரின் ஏற்பாட்டில்
மிகவும் சிறப்பாக கலைநிகழ்ச்சியுடன் இரவு உணவும் வருகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
நிறைவாக ஜோலோர் கெமிலாங் பாடலுடன் சுதந்திர தின கொண்டாட்டத்துடன் வருகையாளர்களுக்கு நிறைவாக அமைந்தது.

