
கோலாலம்பூர் ஆக 27-
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் பிறை சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் ஜாலோர் கெமிலாங் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தலைமையில் இந்த நிகழ்வில் பிறை எம்பிபிகே உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
பிறை வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தேசிய கொடிகளும் இலவசமாக வழங்கப்பட்டது என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய தினத்தை முன்னிட்டு ஜாலோர் கெமிலாங் கொடியை பறக்க விடும் நிகழ்வை பிறை சட்டமன்ற தொகுதி சிறப்பாக செய்து வருகிறது என்றார் அவர்.

