
சென்னை: ஆக 27-
நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அந்த புகைப்படங்களை வைத்து பலரும் பல விதமான வதந்திகளை பரப்பினார்கள்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “விஜய் – திரிஷா விவகாரத்தில் திரிஷாவால்தான் சிக்கல். இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
ஆனால் திரிஷா கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். அதைத்தான் சிக்கல் என்று சொல்கிறேன்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் தரப்பை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வருவது மனைவி சங்கீதாவுக்கு பிடிக்கவே இல்லை.
அந்தப் பிரச்னை வேறு அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது” என்றார்.
முன்னதாக தமிழ் வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழாவுக்கு விஜய்யின் மனைவி சங்கீதா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

