செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் , ஆக 27-
இன்று உலகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படும் வேளையில் மலேசியாவில் புகழ்பெற்ற
பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா இனிதே நடந்தேறியது.
இன்று காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி காணிக்கை செலுத்தினர்.
பிற்பகலில் மகேஸ்வர பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.இன்று இரவு ஏழு மணிக்கு மேல் ஸ்ரீ கிருஷ்ணர் ரத யாத்திரையும் நடைபெறும் என்று ஆலயத் தலைவர் ஸ்ரீ. டத்தோ கே. தங்கப்பெருமாள் தெரிவித்தார்.
ஸ்ரீ பார்த்தசாரதி பட்டாச்சாரியார்,ஸ்ரீ வாமதேவா சர்மா, ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சர்மா, ஸ்ரீ செந்தூரா சர்மா ஆகியோர் இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஆகம முறைப்படி சிறப்பாக நடத்தி வைத்தனர்.
இதனிடையே இன்றைய கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் ஆலயத் தலைவர் டத்தோ கே. தங்க பெருமாளுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
ஆலயச் செயலாளர்பரமேஸ்வரி, துணை
செயலாளர்விநாயகமூர்த்தி, துணை தலைவர்பிரதிப் சிங், பொருளாளர்
செல்வராஜ், அறங்காவலர் ரவி உட்பட ஆலய பொறுப்பாளர்கள் இன்றைய விழாவில் கலந்து கொண்டனர் .
பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய அறங்காவலர் டத்தோஸ்ரீ டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், கம்போங் பண்டான் பிரமுகர் ராஜா காளிமுத்து, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிவசங்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்றைய விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.