
கோலாலம்பூர், ஆக 31-
நாடு இன்று 67ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது
இந்த தருணத்தில் அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலேசிய மக்கள் கொமுனிகேஷன் சங்கத் தலைவர் கே. முத்து தெரிவித்தார்.
இந்த ஆண்டின் கருப்பொருள், “மலேசியா மதனி: ஜிவா மெர்டேக்கா” என்பது ஒரு முழக்கம் மட்டுமல்ல, நம் நாட்டை மேம்படுத்துவதில் செயலில் பங்கு வகிக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு சவாலாகும் என்று முத்து தெரிவித்தார்..
நாம் அனைவரும் மலேசியர்கள் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் அடைவோம் என்று அவர் சொன்னார்
சங்கத்தை சேர்ந்த குணசேகரன் (பிஜேகே) ஈஸ்வரன், ராஜா ஆகியோரும் தங்களது மெர்டேக்கா தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

