தேசிய முன்னணியில் இருந்து மைபிபிபி வெளியேறிவிட்டதா?எங்கள் இதயம் வலிக்கிறது – டத்தோ டாக்டர் லோகபாலா

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் செப் 1-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த கட்சிகளில் மைபிபிபி ஒன்றாகும்.

தேசிய முன்னணிக்கு மைபிபிபி பக்கம் பலமாக இருக்கிறது.

ஆனால் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி விட்டது என்று கூறுவது எங்கள் இதயம் வலிக்கிறது என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

தேசிய முன்னணியில் நாங்கள் இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது எனக்கு மட்டுமே வலியை கொடுக்க வல்லை. மாறாக ஒட்டுமொத்த மைபிபிபி உறுப்பினர்களின் இயத்தை வலிக்க செய்கிறது என்று அவர் சொன்னார்.

டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குரஸ் தலைமையில் பல சவால்களுக்கு மத்தியில் மைபிபிபி கட்சியை காப்பாற்றி விட்டோம்.

இந்த தருணத்தில் அவரின் திடீர் மறைவு எங்களுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது.

மேலும் தேசிய முன்னணியில் இருந்து மைபிபிபி கட்சி வெளியேறி விட்டது – தேசிய முன்னணியில் மைபிபிபி இல்லை என்று கூறுவது கூடுதல் வலியை கொடுக்கிறது என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூர் புத்ரா வாணிப மையத்தில் மைபிபிபி கட்சியின் 71 ஆவது பேராளர் மாநாட்டில் கொள்கை உரையாற்றியபோது டத்தோ டாக்டர் லோகபாலா இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2,000 பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டை தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles