
செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் செப் 1-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த மைபிபிபி கட்சி கடந்த 2018 இல் தேசிய பதிவு இலாகாவால் ரத்து செய்யப்பட்டது.
டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குரஸ் தலைமையில் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்று கட்சியை காப்பாற்றினோம் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று தெரிவித்தார்.
கட்சியை அழிவதில் இருந்து காப்பாற்றிய பெருமை அமரர் டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குரஸ் அவர்களை சாரும்.
நீதிமன்றத்தில் தோற்று போனவர்கள் எங்களுக்கு 14 லட்சம் வெள்ளி இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
இன்று விஸ்மா மைபிபிபி கட்டமும் மீட்டு விட்டோம்.
கட்சியை தவறாக பயன்படுத்தியவரை கட்சியில் இருந்து நீக்கிய வரலாறு நாட்டில் மைபிபிபி கட்சிக்கு மட்டுமே உள்ளது.
இன்று நாடு தழுவிய அளவில் 90 தொகுதிகளுடன் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் மைபிபிபி விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
பல போராட்டங்கள் பல சவால்களை சமாளித்து இன்று சரியான பாதையில் மைபிபிபி கட்சி செல்கிறது என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இன்று புத்ரா வாணிப மையத்தில் மைபிபிபி கட்சியின் 71 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் கொள்கை உரையாற்றியபோது டத்தோ டாக்டர் லோகபாலா இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணி தலைவர் மற்றும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடீர், கிம்மா கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
நாடு தழுவிய அளவில் 2,000 மைபிபிபி பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

