
கோலாலம்பூர் ஆக 31-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் புதையுண்ட இந்திய பிரஜை விஜயலெட்சுமியை தேடும் பணி இன்று நிறுத்தப்படுவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா தெரிவித்தார்.
தேடும் பணி நிறுத்தப்பட்டதை விஜயலட்சுமியின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர்
விஜயலட்சுமி புதையுண்ட நாளில் இருந்து அவரின் குடும்பத்தாருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அவர்களுக்கு தொடர்ச்சியாக நாங்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
முதல் நாளை விட இப்போது அவர்கள் மன வலிமையுடன் உள்ளனர்.
விஜயலட்சுமியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
இதனிடையே விஜயலெட்சுமி விவகாரம் தொடர்பில் மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டியிடம் முறையாக தெரிவித்து விட்டோம் என்றும் அவர் சொன்னார்

