
ஈப்போவிவ் உள்ள லிம் கார்டன் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் அங்குள்ள பலர் பள்ளி மாணவர்களின் தேசிய தின அணிவகுப்பு சிறப்புடன் நடைபெற்றது்
.
இந்த நிகழ்வு லிம் கார்டன் குடியிருப்பாளர்கள அமைப்பின் ஆதரவுடன் பாலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதாக லிம் கார்டன் ருக்குன் தெதாங்கா அமைப்பின் தலைவர் எம்..விஜயன் கூறினார்.
தேசிய தின மாதத்தில் இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தி வருவதாகவம் இதற்கு இந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் நல்லாநரவு வழங்கியதற்பு மகிழ்சியைத் தெரிவித்துக்
கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த மாநகர் மன்ற உறுப்பினர் லோரன்ஸ் பழனிசாமி லிம் கார்டன் ருக்குன் தெதாங்கா அமைப்புக்கு ஆயிரம் வெள்ளி நிதி வழங்கினார்.
பல இன வாழும் இந்த நாட்டு சமுக ஒற்றுமை அவசியம் , இந்த ஒற்றுமை நிலை நாட்ட இதுபோன்ற அணி வகுப்பில் பல இன சமுகத்தினர்கள் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதில் சமுக ஒற்றுமை துறை இலாகாவின் அதிகாரி முகமட் அஸ்லான் கலத்துக்கொண்டு உரையாற்றினார்
இந்த அணி வகுப்பில் பாலர் பள்ளி மாணவர்கள் தேசிய கொடி வர்ணத்தில் உடையணிந்து இந்த பேரணியில் பங்கேற்றது பலரின. கவனத்தை ஈர்த்தது.
அதில சிறந்த உடையணிந்து வந்த மாணவர்களுக்கும் வர்ணம் தீட்டும் போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

