

ஈப்போ ஆக 31-
ஒற்றுமையை மையமாக கொண்டு இந்த அரசு செயல் முறை அமைய வேண்டும் என்று நம் நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அன்வார் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் வரவேற்க தக்கது என்று சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் சுங்கை சிப்புட் துன் சம்பந்தன் சமுக நல இயக்கத் தலைவர் கி. மணிமாறன் கூறினார்.
இந்நாட்டின் நீடித்த வளர்ச்சி .. சுபீட்சமான வாழ்க்கை ஆகியவற்றை இன்றைய தலைமுறை அனுபவித்து வருவது… அன்றைய தலைவர்களின் அர்ப்பணிப்பு..
அவர்கள் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அன்று தேசத்தந்தை துங்கு அப்துல் ரகுமான் அவர்கள் முழங்கிய மெர்டேக்கா… மெர்டேக்கா எனும் கம்பீரமான குரலில் பலர் கண்ணீர் விட்டனர் என்பது ஒரு வரலாற்று.
நமது நாடு பல அன்னிய நாட்டினரின் ஆட்சியில் பல்வேறு வகையான நுன்பங்களையும் .. இன்னல்களையும் அனுபவித்து இன்றைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த ஒற்றுமை சகிப்புத் தன்மை ஆகியவை தொடர்ந்து பாதுகாக்க நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்

