நாடு முழுவதும் மெர்டேக்கா தின கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது!புத்ரா ஜெயாவில் லட்சம் பேர் திரண்டனர்

புத்ரா ஜெயா, ஆக 31-
இன்று நாடு முழுவதும் நாட்டின் 67ஆவது மெர்டக்கா தின கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

புத்ராஜெயா சுதந்திர தின கொண்டாடத்தில் 100,000 மலேசியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 67ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் இன்று காலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இக்கொண்டாட்டத்திற்கு தலைமையேற்றார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , துணை பிரதமர் உட்பட அமைச்சர்கள், துணையமைச்சர்கள், தூதர்கள், உயர் அரசு பணியாளர்கள் என பலரும் இக்கொண்டாடத்தில் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு அணிவகுப்பில் கிட்டத்தட்ட 17,000 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களின் அணிவகுப்பு வந்திருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.

அதே வேளையில் 100,000த்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் இந்த கொண்டாட்டத்தை நேரில் கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பேராக், பினாங்கு, மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மெர்டேக்கா தின கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles