
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர், செப் 1 –
தேசிய முன்னணியில் மைபிபிபி கட்சி மீண்டும் இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அதன் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் மைபிபிபி கட்சி மீண்டும் இணைவது குறித்து விவாதிக்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறி இருக்கிறார்.
அவரின் வாக்குறுதி பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
அந்த வகையில் மைபிபிபி மீண்டும் தேசிய முன்னணியில் இடம் பெறும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
நேர்மையான நியாயமான ஒரு தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மைபிபிபி கட்சி எதிர் நோக்கிய 26 வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளது.
ரத்துச் செய்யப்பட்ட மைபிபிபி கட்சி இப்போது முறையான பதிவுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கட்சி தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ கேவியஸ் விலகினார்.
பின்னர் ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற்ற மைபிபிபி உச்சமன்ற கூட்டத்தில் அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதோடு அவர் உச்சமன்றத்திற்கு தெரியாமல் பல முடிவுகளை எடுத்ததால் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இரண்டு தினங்களுக்கு பின்னர் அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி நான் இன்னமும் மைபிபிபி கட்சியின் தலைவர் என்று கூறி கொண்டார்.
இதனால் கட்சி ஆர்ஓஎஸ் நெருக்கடியை எதிர் நோக்கியது.
நான்கு ஆண்டுகள் நடைபெற்ற 26 வழக்குகளில் நாங்கள் வெற்றி பெற்று மைபிபிபி கட்சியை காப்பாற்றினோம் என்று அவர் சொன்னார்.

