

கோலாலம்பூர் , செப் 1-
தேசிய முன்னணி கூட்டணியில் மைபிபிபி கட்சி மீண்டும் இணைவது குறித்து உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கடந்த 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணியில் இருந்து மைபிபிபி வெளியேறுவதாக அப்போதைய தலைவராக இருந்தவர் அறிவித்தார் .
அந்த காலக் கட்டத்தில் தேசிய முன்னணியில் இருந்து 9 உறுப்பு கட்சிகள் வெளியேறியது.
ஆனால் இப்போது மைபிபிபி கட்சியின் தேசிய இடைக்கால தலைவராக டத்தோ டாக்டர் லோகபாலா இருக்கிறார்.
தேசிய முன்னணியில் இருந்து மைபிபிபி கட்சி வெளியேறி விட்டது என்று கூறப்படுவது பெரும் வேதனையை அளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.
தேசிய முன்னணியில் மைபிபிபி கட்சியின் நிலை என்ன என்பது குறித்தும் அவர் கேள்வியை எழுப்பி உள்ளார்.
அகவே தேசிய முன்னணியில் மைபிபிபி கட்சி மீண்டும் இணைவது குறித்து உச்சமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இதனிடையே டத்தோ டாக்டர் லோகபாலா கூறுகையில் கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் இப்படி கூறி இருக்கிறார்.
இருப்பினும் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் இன்று ஒரு நல்ல பதிலை வழங்கி இருக்கிறார் என்று அவர் சொன்னார்.

