
ஈப்போ, செப். 2-
பேராக் மாநில அளவிலான 67 ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர்
கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு ஈப்போ ஜாலான் புக்கிட் கந்தாங் சாலையில் நடந்தேறியது. ஈப்போ மாநகர் மன்றத்தின் மண்டபத்தின் முன்புறத்தில் சுதந்திர தின அணிவகுப்பு சிறப்பாக நடந்தேறியது.
இந்த சுதந்திர தின நிகழ்வு முறையாக காலை மணி 8.00 க்கு தொடங்கப்பட்டது. சிறப்பு பிரமுகர்களாக பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளும் கலந்துக்கொண்டனர்.
அத்துடன், பேராக் ராஜா மூடா தம்பதியினர் மற்றும் பேராக ராஜா டி ஹீலிர் தம்பதியினர் கலந்து சிறப்பித்தனர்.
பேராக் மாநில அரசாங்க சார்பில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட் தம்பதியினருடன், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அவர்களுடன் மாநில செயலாளர் டத்தோ சுஹாய்டி தம்பதியினரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் அரச இராணுவப்படையின் பொறியியல் துறையினரின் அரச மரியா அணிவகுப்பு சிறப்பாக நடந்தேறியது. அதனைத்தொடர்ந்து சம்தெட் மற்றும் அவா மரியா கொன்வன் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் , தேசிய கீதம் மற்றும் ஜாலோர் கெமிலாங் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தனர்
அதன் பின், நடைபெற்ற அணிவகுப்பில் இடைநிலைப்பள்ளிகளின் இசைக்குழுவின் படைப்பு, தனியார் துறை மற்றும் அரசாங்க துறைகளின் அணிவகுப்பு மற்றும் சீருடை பணியாளர்களின் அணிகுப்பில் காவல்துறை, இராணுவத்துறை, கடல்படையினர், தீயணைப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் இந்த அணிவகுப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த அணிவகுப்பில் இராணுவ ஊர்திகள், காவல்துறை வாகனங்கள், சூப்பர் மோட்டர் சைக்கிள் குழுவினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

