
விளாடிவோஸ்டோக், செப். 3–
கிழக்குப் பொருளாதார மன்ற ஆய்வரங்கில் (இ.இ.எஃப்.) பங்கேற்கும் பிரதமர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் ரோஸ் காங்கிரஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இ.இ.எஃப். ஆய்வரங்கில் சந்திக்கும் டத்தோஸ்ரீ அன்வார், பொருளாதார ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கவுள்ளதோடு தனது நாட்டின் சுதந்திரமான நிலைப்பாட்டையும் வலியுறுத்துவார் என்று அந்த அறக் கட்டளையை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
இ.இ.எஃப். ஆய்வரங்கு விளாடிவோஸ்டாக்கில் உள்ள தூர கிழக்கு கூட்டரசு பல்கலைக்கழகத்தில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா

