
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் பண்டமாரான் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
இந்த குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் தூர் நாற்றம் வீசுகிறது.
இந்த குப்பைகளை அகற்ற கோரி நாளை புதன்கிழமை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அலுவலகத்தில் மகஜரை கொடுப்போம் என்று கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் தீபக் தெரிவித்தார்.
கிள்ளான் வட்டாரத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏறுவதற்கு இந்த குப்பைகள் கால்வாய்களில் தேங்கி கிடக்கிறது என்று அவர் சொன்னார்.

