பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்தஎஸ்டிபிஎம் முடித்த மாணவர்களுக்கான முடிவு நாளை அறிவிக்கப்படுகிறது

கோலாலம்பூர்: செப் 5-
பொது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்த எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் எஸ்டிஏஎம், டிப்ளோமா முடித்த மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் நாளை நண்பகல் 12 மணி தொடங்கி தங்களின் விண்ணப்ப முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

https://jpt.utm.my, https://jpt.uum.edu.my; https://jpt.unimas.my, https://jpt.ums.edu.my, https://jpt.umt.edu.my ஆகிய இணையத் தளங்களில் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

அந்தந்த பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்ப முடிவுகளை ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தலாம்.

விண்ணப்ப முடிவுகளை ஏற்றுக் கொண்ட மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்களிலிருந்து அதிகாரப்பூர்வ சேர்க்கை கடிதத்தைப் பெறுவர்.

பொது பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பத்தில் தோல்வியடைந்த மாணவர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை மறுவிண்ணப்பம் செய்யலாம்.

2024/2025-ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுக்கான இடம் வழங்குவது இறுதியானது.

படிப்புத் திட்டங்களையும் பொதுப் பல்கலைக்கழகங்களையும் மாற்றுவதற்கான எந்தவொரு விண்ணப்பமும் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்படாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles