ஷா ஆலம் Tasik Seksyen 7-இல் உள்ள முதலை பிடிக்கப்பட்டது!

ஷா ஆலம்: செப் 5-
பொறி நிறுவப்பட்டு 24 மணி நேரத்திற்குள், ஷா ஆலம் Tasik Seksyen 7-இல் உள்ள முதலை நேற்று இரவு 12 மணியளவில் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் சிலாங்கூர் இயக்குனர் வான் முஹம்மத் அடிஃப் வான் முஹம்மத் யூசோ, நேற்றிரவு 10.20 மணியளவில் முதலை பிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

பிடிப்பட்ட முதலை 1.68 மீட்டர் நீளமாகும். அது சுமார் மூன்று முதல் ஐந்து வயதுடையது.

அதன் எடை 15 முதல் 20 கிலோகிராம் வரை இருக்கிறது.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles