

செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் , செப் 5 –
சிந்தனை ஆற்றல் கொண்ட தலைமைத்துவம் எனும் நூல் இளம் தொழில் முனைவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று
சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டான்ஸ்ரீ பாலன் இதன் தெரிவித்தார்.
இது நான் எழுதும் 21ஆவது நூல் இதுவாகும். கடந்த 20 நூல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் இந்த நூலில் இருக்கும். குறிப்பாக இந்நூல் வர்த்தகத்தில் சாதிக்க வேண்டும் என துடிப்புடன் செயல்படுபவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
எப்படி வர்த்தகம் செய்வது, அதில் எவ்வாறு சாதிப்பது உட்பட பல வழிகாட்டிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
காரணம் வர்த்தகத்தில் சாதித்தவர்களின் அனுபவங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. அதே வேளையில் தலைமைத்துவ ரீதியில் சாதித்தவர்களை குறித்தும் இந்நூலில் எழுதப்பட்டது.
குறிப்பாக தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ப. சகாதேவன் குறித்தும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
ஆகையால் இந்நூல் கண்டிப்பாக படிப்பவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பயனாக இருக்கும் என டான்ஸ்ரீ பாலன் கூறினார்.
முன்னதாக பாங்கி தேசிய பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமத் இக்வான் இந்நூலை வெளியிடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர் சிறுதொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன், தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ப.சகாதேவன், டான்ஸ்ரீ பூவன், டான்ஸ்ரீ ரவிமேனன், டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், டத்தோ டாக்டர் ஞான பாஸ்கரன், டத்தோ விக்னேஸ்வரன் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

