
டாக்கா: செப் 6- வங்களாதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து கொண்டு அரசியல் கருத்துகளை வெளியிடுவது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை பாதிக்கும்.
ஷேக் ஹசீனாவை, வங்காளதேசத்துக்கு நாடு கடத்தக் கோரும் வரை, அவரை தங்கள் நாட்டில் வைத்துக்கொள்ள இந்தியா விரும்பினால், இரு நாடுகளுக்கும் இடையே அசவுகரியம் ஏற்படாமல் இருக்க அவர் அமைதியாக இருக்க வேண்டும்”
அவர் அமைதியாக இல்லாவிட்டால் அது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை பாதிக்கும்.
இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. அங்கிருந்து கொண்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவர் சாதாரணமாக இந்தியா செல்லவில்லை. மக்களின் எழுச்சி மற்றும் கோபத்தைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட்டார் ”என்று கூறினார்.

