ஜாலான் மஸ்ஜித் இந்தியா குறித்து டிக் டாக் செய்பவர்களுக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை!

கோலாலம்பூர்: செப் 6-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு இடத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும் என்று கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ருஸ்டி இசா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டு மரணமடைந்தார்.

புதையுண்ட விஜயலட்சுமியை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டாலும் அங்கு தொடர்ச்சியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக நில அமிழ்வு நிகழ்ந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே பொதுமக்கள் அப் பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

அதே வேளையில் அப் பகுதியில் வீடியோ எடுப்பதையும் அனைவரும் நிறுத்த வேண்டும்.

எடுக்கும் வீடியோக்களை டிக் டாக்கில் பதிவேற்றம் செய்வதுடன் தேவையில்லாத விமர்சனங்களை செய்வதையும் அவதூறு பரப்புவதையும் அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் போலிசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles