விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் தங்க ரத ஊர்வலம்!

கோலாலம்பூர் செப் 6-
தலைநகர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்று
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்..

இன்று செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மாலை 7 மணிக்கு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு கொடியேற்று வைபவம் நடைபெறும்.

இரவு 7.30 மணிக்கு ஶ்ரீ கணேசர் பெருமான் தங்க ரதத்தில் தலைநகரை சுற்றி வலம் வருவார்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி காலை முதல் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

சனிக்கிழமை என்பதால் அதிகமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles