பேரா மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் இருக்கின்ற ஆலய நிலப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுக்காண மாநில அரசு நடவடிக்கை!

ஈப்போ செப் 6-
பேரா மாநிலத்தில். உள்ள ஆலயங்களை காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரா மாநில இந்திய விவகாரங்களுக்காக தலைவரும் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.

பேரா மாநிலத்தில் குறிப்பாக அரசாங்க மற்றும் தனியார் நிலங்களில் கட்டப்பட்டுள்ள ஆலயங்களுக்கு தீர்வுக்காண நில அலுவலக அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவைகளுக்கு படிபடியாக தீர்ரவுகாணபட்டு வருகிறது. அவைகளை உடைக்கப்படாது சுமுகமான முறையில் தீர்ரவுகாணப்பட்டு வருகிறது என்றார்

ஆக ஆலயங்களை மாநில அரசாங்க அனுமதியின்றி உடைக்கக் கூடாது உடைபடாது என்று உறுதி அளித்தார்

.இருக்கின்ற ஆலயங்ளை பாதுகாக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவநேசன் கூறினார்.

இன்று தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள மதுரை வீரன் ஆலயம் , தாசேக்கில் உள்ள மற்றொரு மதுரைவீரன் ஆலயம் மற்றும் கென்னிங் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீ மகா கனக துர்கை அம்மன் ஆலயங்கள் எதிர் நோக்கி வரும் நிலப்பிரச்சனைகுக்கு சமுகமான முறையில் தீர்வுக்காண நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கிவநேசன் தெரிவித்தார்.

இன்று காலையில் மேல் குறிப்பிட்ட மூன்று ஆலயங்களின் நிலப்பிரச்சனைகளுக்கு வருகை அளித்தப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரா இந்து சங்கத் தலைவர் சுந்தரசேகரர், ஆலய நிலப் பிரச்சனைக்கு சமுகமான முறையாக நடவடிக்கை எடுத்து வரும் மாநில ஆட சிக் குழு உறுப்பினர் சிவநேசனுக்கு நன்றியைத தெரிவித்துக்கொண்டதுடன் ஆலய நிலப்பிரச்சனைக்கு தீர்வுக்காண ஆலய பொறுப்பாளர்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles