
2019 ஆம் ஆண்டு இறுதியில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் உட்பட 12 இந்தியர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர் அப்போதைய பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் அறிவித்த பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் கைது நடவடிக்கைக்கு மூலையாக இருந்து செயல் பட்டவர் இந்த மொகிதீன் யாசின் என்று டாக்டர் இராமசாமி சாடினார்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் இந்திய சமுதாயம் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்கும் பட்சத்தில் மலேசிய இந்தியர்களின் பிரச்சனைக்கு படிப்படியாக தீர்வு காண முடியும் என்று அவர் சொன்னார்.

