சுங்கை சிப்புட், தாப்பா, பகான் டத்தோ கோட்டையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஊடுருவல்!
மக்கள் அலையென திரண்டு பக்கத்தானுக்கு ஆதரவு

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் , அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோர் போட்டியிடும் சுங்கை சிப்புட், தாப்பா, பகான் டத்தோ ஆகிய தொகுதிகளில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மேற்கொண்ட அதிரடி பிரச்சாரத்தில் மக்கள் அலையென திரண்டு பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு வழங்கினர்.

தாப்பாலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பிரபல வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி, சுங்கை சிப்புட்டில் எஸ். கேசவன், பகான் டத்தோவில் சம்சூல் இஸ்கந்தார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த மூன்று தொகுதிகளில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அனல் தெறிக்கும் பேச்சால் தாப்பா, சுங்கை சிப்புட், பகான் டத்தோ அதிர்ந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles