
கடந்த பத்து தினங்களாக பக்கத்தான் ஹரப்பானை ஆதரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரபிஸி ரம்லி, கோபிந்த் சிங் டியோ, முகமட் சாபு, அந்தோணி லோக் உட்பட பல தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் வேளையில் சிகப்பு அலை கூட்டம் அலைமோதுகிறது.
பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூட்டங்களுக்கும் மக்கள் கூடுகிறார்கள்.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இல்லாததால் தேசிய முன்னணி கூட்டங்கள் கலைகட்டவில்லை.
தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் தங்களது தொகுதிகளிவேயே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மற்ற தொகுதிகளுக்கு செல்வது குறைவு.
வாக்களிக்க இன்னும் நான்கு தினங்களே உள்ளதால் தேசிய முன்னணி தலைவர்கள் தங்களது தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டும் என்று மலேசிய கினி இணையத் தளத்தில் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

