
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருவதை தியான் சுவா விரும்பவில்லை.
அவர் உண்மையிலேயே டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது அன்பும் பாசமும் வைத்திருந்தால் பத்து நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் வேட்பாளரான என்னை எதிர்த்து சுயேட்சையாக தியான் சுவா போட்டியிருக்க மாட்டார்.
ஆனால் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராக தியான் சுவா புறப்பட்டிருக்கிறார்.
என்னை எதிர்த்து 9 பேர் போட்டியிட்டாலும் இறைவனின் அருளால் மக்களின் ஆதரவோடு பத்து நாடாளுமன்ற தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

