
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவை ஆதரித்து கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ இன்று களத்தில் இறங்கினார்.
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற முழு ஆதரவு வழங்குவதாக சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
கணபதிராவை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி இருப்பதாக இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

