
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் என்னுடைய எம்.பி. சம்பளத்தை tabung pakatan ulu Selangor அறவாரியத்தில் சேர்த்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கி விடுவேன் என்று பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை நான் எடுத்து கொள்ள மாட்டேன்.
இந்த சம்பளத்தை அப்படியே அறவாரியத்தில் சேர்த்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
உலு சிலாங்கூர் தொகுதி மக்களுக்கு கடுமையாக உழைத்து வருகிறேன்.
இறைவனின் அருளால் மக்களின் ஆதரவோடு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.


