
பெட்டாலிங் ஜெயா: செப் 7-
மஇகா-வின் முன்னாள் உதவித் தலைவர் செனட்டர் டத்தோ சி.சிவராஜ் கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் அக்கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.
கேமரன் மலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மீண்டும் மஇகா-வில் உறுப்பினரானதை உறுதிப்படுத்தினார்.
தான் மீண்டும் கட்சியில் சேர உறுதுணையாக இருந்த கட்சித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் எம்.சரவணன், மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் டத்தோ சிவராஜ் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
மஇகாவில் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு தமக்குக் கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.

