
நியூயார்க்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் நாடுகளை வரவேற்போம் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த சண்டை நடந்து வருகிறது.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷ்யாவிடம், சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.
ரஷ்யாவுடன் சீனா இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. சமீபத்தில் ரஷ்யாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார். இதனால் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

