செராஸ் தொகையை விநாயகர் ஆலயத்தில் ரத ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் செப் 8-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த செராஸ் இரண்டரை மைல் ஸ்ரீ தோகையடி விநாயகர் ஆலயத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் எஸ்.டி.பாலா எனப்படும் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கோக் வாய் சிறப்பு வருகை புரிந்ததோடு நமது சார்பில் ஆலயத்திற்கு 20,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

பார்லிமென்ட் செல்வா உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நேரத்தில் நடைபெற்ற ரத ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வழி நெடுகிலும் பக்தர்கள் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மேலும் ஏராளமான தேங்காய்களையும் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது என்று தலைவர் தனபாலன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles