
வாஷிங்டன்: செப் 8-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை டொனால்டு டிரம்புக்கு தண்டனை விதிப்பதை ஒத்தி வைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப், 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார்.
அப்போதைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டிகள் அளித்தார்.
இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், பேட்டி தராமல் இருப்பதற்காக, பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார். இவ்வாறு தரப்பட்ட பணத்துக்கு பொய்க்கணக்கும் எழுதியுள்ளார்.

