
குளுவாங்,செப் 8
ஜொகூர் மாநில மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி களமிறங்குவதால் அதற்கான வேட்பாளர், தேர்தல் கேந்திர அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய மந்திரி புசார், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் அதற்கான வேட்பாளர் தேர்வில் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இத் தேர்தலில் போட்டியிட பலரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வேட்பாளர்களின் பெயர்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இறுதியில் குளுவாங் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் ஹுசைன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இளைஞரான சைட் உசைன் வெற்றியை உறுதி செய்ய அனைவரும் ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

