இந்திய சமூகத் தலைவர்களுக்கான மானியத்தை அதிகரிக்க சிலாங்கூர் அரசிடம் பரிந்துரை- பாப்பா ராய்டு அறிவிப்பு

ஷா ஆலம், செப். 8-
இந்திய சமூகத் தலைவர்களுக்கான வருடாந்திர மானியத்தை அடுத்தாண்டு தொடங்கி 10,000 வெள்ளியிலிருந்து 20,000 வெள்ளியாக உயர்த்துவதற்கான பரிந்துரையை தாம் மாநில அரசிடம் முன்வைத்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.

தமது இந்த பரிந்துரையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ள வேளையில் மானிய உயர்வு தொடர்பான திட்ட அறிக்கை முறையாக ஆட்சிக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு உரிய அங்கீகாரத்துடன் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் தங்கள் தொகுதிகளில் இந்திய சமூகத் தலைவர்கள் தங்கள் பணிகளை ஆக்ககரமான மேற் கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மானிய உயர்வு பரிந்துரை முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles