பலாக்கோங் லீயோ மெட்டல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலய வருடாந்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது!

மா.பவளச்செல்வன்

பலாக்கோங், செப். 8-
செராஸ் பலாக்கோங் லீயோ மெட்டல் தொழிற்சாலை பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரை வீரர் ஆலய வருடாந்திர திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய உலோக பொருள் மறுசுழற்சி சம்மேளனத்தின் உதவித் தலைவரும் லியோ மெட்டல் நிறுவனத்தின் உரிமையாளருமான டத்தோ முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிற்பகல் மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

இந்த திருவிழாவில் சிறப்புப் பிரமுகராக கலந்து கொண்ட
புக்கிட் அமான் குற்றத்தடுப்பு சமூக பாதுகாப்பு துணை இயக்குநர் டத்தோ கே. குமரன் அவர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles