ஈப்போ, செப். 8: இங்குள்ள ஸ்ரீ கந்தன் கல்லுமலை காளியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா இம்மாதம் 15 ல் நடைபெறவுள்ளது. இவ்வாணடில் பால் குடத்திற்கு இலவசம். ஆகையால், பால்குடம் எடுக்கும் பக்தர்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில் என்று ஆலயத்தலைவர் தியாகராஜன் கூறினார்.
முதல் கட்டமாக பால் குடத்தை பக்தர்கள் இம்மாதம் 14 ல், மதியம் மணி 2.30 முதல் மாலை மணி 6.30 வரை செலுத்தலாம். அதன் பின் அபிஷேகங்கள் சுமார் ஒரு மணி்நேரம் நடைபெறும். அதன் பின்னர் பால்குடம் காணிக்கை நடவடிக்கைகள் மாலை 7.30 க்கு தொடங்கி இரவு மணி்10.30 க்கு முற்றுப்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மறுநாள் 15 ல் தீமிதி திருவிழா நடைபெறவுள்ளது. அன்று காவடிகள் நள்ளிரவு மணி 12.00 க்குள் ஆலயத்தை வந்தடைய வேண்டும். காவடிகள் ஆலயத்தை வந்தடைய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. நள்ளிரவு 12.00 மணிக்கு ஆலய முன்வாசல் கதவு( கேட்) மூடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 5 ல், ஆலயத்தின் கொடியேற்றம் விழா சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டு தீமிதி திருவிழாவிற்கு ஆலய சார்பில் சுமார் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் பேராதவு வழங்கி வருகின்றனர். பக்தர்கள் தேவையை அறிந்து ஆலய நிர்வாகத்தினர் ஒரு சில விவகாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, இவ்வாண்டில் தீ சட்டியை ஏந்திவரும் பக்தர்கள் தங்கள் தீ சட்டியை ஆலய முன்புறத்தில் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், பக்தர்கள் தங்கள் தீ சட்டி காணிக்கையை சிறப்பாக செய்ய முடியும் என்று அவர் உறுதியளித்தார்.
இவ்வாண்டில் சிறுதொழில் வியாபாரிகள் ஆலய வளாகத்தில் வியாபாரம் செய்வதற்கு 200 கடைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து கடைகளும் வியாபாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இவ்வாண்டில் நடைபெறும் இந்த தீமிதி திருவிழாவிற்கு பொதுமக்களை ஆலய நிர்வாகத்தினர் அன்போடு அழைக்கின்றனர். இந்த தீமிதி திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் நம்முடைய கலை பண்பாட்டு கலாச்சார உடையணிந்து ஆலயத்திற்கு வரும்படி ஆலயத்தலைவர் தியாகராஜன் அன்போடு கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில், ஆலயத்தலைவர் தியாகராஜன், துணைத்தலைவர் சசி மேனன், பொருளாளர் சுகுமாறன், செயலாளர் செல்வ கணபதி மற்றும் துணச்செயலாளர் குபேரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.