இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு மடானி அரசு உறுதிபூண்டுள்ளது! டத்தோ இரமணன் கூறுகிறார்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர், செப் 8 ஊக்கமளிக்கும் செயல்திறனைக் காட்டிய இந்திய தொழில் முனைவோருக்கான SPUMI Goes Big, PENN மற்றும் BRIEF-I நிதியளிப்பு முயற்சிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகு, இந்த நாட்டில் இந்திய சமூகப் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மடானி அரசாங்கம் தொடரும் என்று
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ இரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களில் தொடங்கப்பட்ட TEKUN Nasional இன் கீழ் SPUMI GOES BIG திட்டம் 30 மில்லியன் கூடுதல் நிதியை ஒதுக்கி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

202 தொழில்முனைவோருக்கு RM 10 மில்லியன் விநியோகிக்கப்பட்டுள்ளது.

SPUMI GOES BIG என்பது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தின் (KUSKOP) கீழ் ஏப்ரல் 3, 2024 அன்று தொடங்கப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும்.

TEKUN Nasional (TEKUN) SPUMI அதிகாரமளிக்கும் நிதித் திட்டத்தை (SPUMI Goes Big) தொடங்கியுள்ளது.

இது இந்திய சமூகத்தில் உள்ள தொழில்முனைவோர்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும், பெருமைப்படுத்தவும் மற்றும் தொழில் முனைவோர் துறையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது என்று அவர் சொன்னார்.

இந்த ஆண்டு தற்போதுள்ள RM30 மில்லியன் பட்ஜெட்டில் இருந்து கூடுதலாக RM30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,

இது இந்திய சமூக தொழில்முனைவோருக்கான மொத்த ஒதுக்கீடு RM60 மில்லியனாக திட்டம் நிறுவப்பட்டதில் இருந்து மிகப்பெரியது என்று டத்தோ இரமணன் கூறினார்.

5 ஜூன் 2024 அன்று தொடங்கப்பட்ட BRIEF-I (BRIEF-I (Bank Rakyat Indian Entrepreneur Financing-i) திட்டத்திற்காக, 322 இந்தியர்களுக்கு மொத்தம் 27 மில்லியன் RM விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுங்கை பூலோவின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ இரமணன் தெரிவித்தார்.

அமானா இக்திஹார் மலேசியாவின் (ஏஐஎம்) கீழ் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட PENN திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles