
பினாங்கு செப். 13-
இந்த நாட்டில் உள்ள இந்திய சமுதாயம் ஆற்றல் உள்ள சமுகமாக உள்ளது. யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று மக்கள் சக்தி கட்சி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர் எஸ். தனேந்திரன் அறைகூவல் விடுத்தார்.
இருந்தபோதும் இந்த நாட்டில இந்திய இளைஞர்கள் எதிர்காலத்தில் மேலும் சிறப்புடையவர்களாக உருவாக்க அரசாங்கம் அவர்களின் தேவைகளை அறிந்து உதவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தங்களின் கல்வியை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு அரசு துறைகளிலும் அதிகமான வாய்ப்புகள், வர்த்தகத் துறையில் ஈடுபட வழிகாட்டுதல்களை உருவாக்க அரசாங்கம் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் பினாங்கு மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும், கட்சிக்கு எப்போதும் விசுவாசமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்புமே கட்சியின் எதிர்கால வெற்றிக்கு முக்கியமாகும் என்றும் அவர் நினைவூட்டினார்.
இந்த மாநாட்டில் டாக்டர் ஏ.வி. பிரசாத் தலைமையிலான பத்து கவான் மற்றும் நிபோங் திபால் மக்கள் சக்தி கிளைகளில் உறுப்பினர்கள் பட்டியல் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது்

