
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் செப் 13-
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவிலை கட்டி முடிக்கும் பணியில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் ம இகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏகே இராமலிங்கம் ஒன்று இணைந்திருப்பது பாராட்டுக்குரியது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இரு துருவங்கள் ஒன்றிணைந்து இந்த கோவில் கட்டும் பணியை ஒற்றுமையுடன் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதன் வழி இந்த கோயில் புதிய நிலத்தில் கட்டப்படுகிறது.
இந்த கோவில் கட்டுமானப் பணிக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர முன் வந்திருக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் டத்தோ இராமலிங்கத்திற்கு கோவில் நிர்வாகம் பக்கபலமாக இருந்து செயல்பட வேண்டும்.
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி இருப்பது பாராட்டுக்குரியது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

